தருண் கோபியின் வெறியும், காதல் சந்தியாவும்

Mahalakshmi| Last Modified புதன், 3 ஜூன் 2015 (14:38 IST)
மதுரை பின்னணி படம் என்றாலே பரட்டை தலையுடன் அரிவாளை கையில் வைத்து போஸ்டர் ஒட்டி வெறுப்பேற்றுவார்கள். இதில் தருண் கோபி இயக்கி நடிக்கும் படத்தின் பெயர், வெறி. 
திமிரு படத்தில் இரண்டாம் பாகம் என்ற கேப்ஷனோடு தயாராகியிருக்கிறது வெறி. இதில் தருண் கோபியுடன் காதல் சந்தியாவும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சந்தியாவுக்கு கிடைத்திருக்கும் நாயகி வேடம்.
 
கதை முழுக்க மதுரையின் பின்தங்கிய கிராமங்களில் நடக்கிறது. படத்தின் பெயர்வேறு, வெறி. படம் நெடுக வெட்டி சாய்ப்பார்கள் என தோன்றுகிறது. ரமணா இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
திமிரு படத்தில் கிடைத்த பெயரை திரும்பப் பெறும் முயற்சியில் இந்தப் படத்தை தருண் கோபி எடுத்து வருகிறார். இதுபோன்ற முயற்சிகளில் ஆவேசம் கூடாது. வெறியுடன் எடுத்தால் தறிகெட்டுப் போகும். தருண் கோபிக்கு தெரியாதா?


இதில் மேலும் படிக்கவும் :