செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By கே.என்.வடிவேல்
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (00:28 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்-ன் கபாலி டீசர் விரைவில் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வரும் படம் கபாலி. இந்த படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகாரித்துள்ளது. கபாலி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ரூ 8.5 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், கபாலி படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அனைத்துக் காட்சிகளும் பிப்ரவரி 20 ஆம் தேதி அல்லது 25 ஆம் தேதிக்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து, கபாலியின் டீசரை பிப்ரவரி மாத இறுதியில்  வெளியிட படத்தயாரிப்பு நிர்வாகம் முயற்சி செய்து வருகிறதாம்.
 
காரணம், தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மற்றும் பள்ளி  மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஆகியவைகளை கணக்கில் கொண்டு இப்பம் வெளியாகும் என கூறப்படுகிறது.