வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 மே 2016 (11:18 IST)

’கபாலி’ டீஸர் சாதனை : மூன்றே நாட்களில் 1 கோடியை தாண்டிய பார்வையாளர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கபாலி திரைப்படத்தின் டீஸர் வெளியான மூன்றே நாட்களில் 1 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.
 

 
ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, நாசர், வின்ஸ்டன் சோ, ரோஷன், தன்ஷிகா, கலையரசன், கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கபாலி’. இந்த படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
 
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்துள்ளார். கபிலன், கானா பாலா, உமாதேவி, அருண் ராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
 
மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீஸர் தொழிலாளர் தினமான மே 1 அன்று 11 மணிக்கு வெளியானது. இந்நிலையில் இன்று மதியம் 11 மணிக்குள் கபாலி திரைப்படத்தின் டீஸரை 1 கோடியே 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.