வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 7 ஜூன் 2017 (10:25 IST)

'காலா' முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் 164ம் படம் 'காலா'. தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் தொடங்கியது. காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைத்துள்ளதால் ரஜினி சென்னை திருப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
சென்னையில் ஏற்கனவே தாராவி செட் போடப்பட்டுள்ளது. இங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. சில தினங்கள் ஓய்வுக்குப் பிறகு ரஜினி சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
 
மேலும் இம்மாதம் கடைசியிலோ அல்லது ஜுலை மாத துவகத்திலோ ரஜினி மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது ரஜினி அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பதில்  அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.