Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கபாலி ஓப்பனிங்கைவிட ‘காலா’ ஓப்பனிங் பெரிசா இருக்கும்…

CM| Last Modified சனி, 3 மார்ச் 2018 (15:13 IST)
‘கபாலி’ ஓப்பனிங்கைவிட ‘காலா’ ஓப்பனிங் பெரிசா இருக்கும் என ஒளிப்பதிவாளர் முரளி தெரிவித்துள்ளார்.
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான முரளி, “ ‘கபாலி’யில் ரஜினியின் இண்ட்ரோவைவிட ‘காலா’ படத்தின் இண்ட்ரோ பெரிதாக இருக்கும். ரஜினிக்கு இண்ட்ரோ வைப்பது எப்போது சவாலானது. ஒவ்வொரு முறையும் அதை விரும்பியே செய்கிறேன்.
 
ரஜினியின் பெஸ்ட் இண்ட்ரோ ஸீன் என கூகுளில் தேடினால், ‘கபாலி’க்கு அதில் முன்னணியில் இடம்பெற்றிருக்கும். எனவே, அதையும்விட பெரிதாக ‘காலா’வில் முயற்சித்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :