வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 28 மே 2017 (17:35 IST)

காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் - வைரைல் புகைப்படங்கள்...

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.


 

 
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. இப்படம், நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கதை என ரஞ்சித் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.


 

 
இந்நிலையில், இன்று மும்பையில் நடக்கும் காலா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளது. தாடி மற்றும் கருப்பு கண்ணாடி, வேஷ்டி சகிதமாக ரஜினி ஸ்டைலாக நிற்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


 


அந்த புகைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் உள்ளனர்.
 
இந்த விவகாரம் ரஞ்சித் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.