“சூர்யா வேண்டாம்…” - கே.வி.ஆனந்த் அதிரடி

cauveri manickam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (11:33 IST)
அயன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ள கே.வி.ஆனந்த், சூர்யாவுக்குப் பதில் வேறொரு நடிகரை அதில் நடிக்கவைக்கப் போகிறாராம். 
ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி.ஆனந்த், ‘அயன்’, ‘கோ’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். இவருடைய படங்களில், எழுத்தாளர்களான சுபா பணிபுரிந்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டு வெளியான ‘அயன்’ படத்தில், சூர்யா, தமன்னா இருவரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது தயாராக இருக்கிறது. “எங்கள் படங்களிலேயே ‘அயன்’ மற்றும் ‘கோ’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தைத்தான் எல்லோரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். ‘கவண்’ கிட்டத்தட்ட ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம்தான்” என்கின்றனர் எழுத்தாளர்கள் சுபா.

“விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’, ஜீவா நடித்த ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம்தான். அதைப்போல, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், புது கதையைத்தான் ‘அயன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இயக்கப் போகிறேன்” என்கிறார் கே.வி.ஆனந்த். ஜீவாவுக்குப் பதில் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியதுபோல், சூர்யாவுக்குப் பதில் வேறொரு நடிகரை வைத்து ‘அயன் 2’ படத்தை இயக்கப் போகிறார் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :