வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : புதன், 27 மே 2015 (13:01 IST)

அம்மாவின் தொண்டன் - இது படத்தின் பெயருங்க

சொந்த காசில் சூன்யம் வைக்கும் பி.சி.அன்பழகன் போல் பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். கே.எஸ்.நேசமானவன் நான் தமிழன்டா, காயிலாங்கடை போன்ற படங்களை எடுத்தவர். இவரது புதிய படம், அம்மாவின் தொண்டன்.
 
இரண்டரை மணிநேரம் பிளான் செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அதிமுக அரசின் அதாவது அம்மாவின் சாதனைகள் மட்டுமே இடம்பெறும். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் அம்மா செய்த சாதனைகளை இந்தப் படத்தில் கொண்டு வரப்போகிறாராம். 
 
ஆடல் பாடல் என்று எடுக்கும் படங்களையே தியேட்டரில் பார்க்க ஆளில்லை. அம்மாவின் தொண்டனைப் பார்க்க தொண்டர்களாவது வருவார்களா? இந்த ஒரு விஷயத்தில் மகா தெளிவாக இருக்கிறார் நேசமானவன். பிரச்சாரப் படம் என்பதால் 234 தொகுதிகளிலும் பிரச்சாரப் படமாக மட்டுமே இது பயன்படுத்தப்படும், திரையரங்குகளுக்கு வராது என்றார். பெரும் நிம்மதி.
 
இந்தப் படத்தில் நேசமானவன்தான் ஹீரோ. குண்டு கல்யாணம் போன்ற அதிமுக விசுவாசிகள் நடிக்கின்றனர்.
 
தியேட்டருக்கு வராத படம், யார் நடித்தால் என்ன.