கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோவின் சிகரெட் காட்சிக்கு எதிர்ப்பு !

Sinoj| Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (16:00 IST)
 

கேஜிஎஃப் படத்தின் டீசர் டீசரை ஜனவரி 7 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. தற்போதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். இதில் இடம்பெற்றிருந்த புகைபிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ராக் ஸ்டார் பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சேர்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், ஜனவரி 8 ஆம் தேதி, காலை 10;18க்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி இரவு கே.ஜி.எஃப் படக்குழு இப்படத்தின் டீசரின் ஒரு பகுதியை படக்குழு வெளியிட்டது
 
மேலும் கர்நாடக சுகாதாரத்துறை இந்த ராக்கி பாய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இக்காட்சிகளை படக்குழு மாற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தற்போது வரை கேஜிஎஃப் டீசரை 13 கோடி பெர் பார்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :