வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (11:49 IST)

வெறும் 8 மாத காதல் தான்! - தேம்பி அழுத வி.ஜே. மணிமேகலை

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை  தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.


 
சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மணிமேகலை. இவர் ஹுசைன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த வருடம் டிசம்பர் 6ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
திருமணம் பற்றி அறிவித்த மணிமேகலை , என் திருமண விஷயத்தில் என் தந்தையை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. எல்லாம், என் கை மீறிச் சென்றதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒருநாள் என் தந்தை என்னைப் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் தற்போது  வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வரும் மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு மாறவில்லை. இதனால் ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.
 
 
சமீபத்தில் இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை திருமணத்திற்கு பின்னர் மிகவும் கஷ்டப்படுவதாகவும். தனது அப்பா ,அம்மாவை  மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார் .