வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (16:13 IST)

தெலுங்கில் ரீமேக்காகும் கத்தி - ஜுனியர் என்டிஆர் நடிக்கிறார்...?

தமிழில் வெற்றி பெற்ற விஜய்யின் கத்தியை கடைசியில் தெலுங்கில் ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர்.
 
விவசாயிகளின் பிரச்சனையை மேலோட்டமாக பேசும் கத்தியை தெலுங்கில் தயாரிப்பாளர் மது ரீமேக் செய்கிறார். அனேகமாக ஜுனியர் என்டிஆர் விஜய் நடித்த வேடத்தை செய்யக் கூடும். டான் சீனு, பாடிகார்ட் படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி இந்த ரீமேக்கை இயக்குவார் என கூறப்படுகிறது.
 
இன்னும் இந்த செய்திகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக இந்த ரீமேக் குறித்து அறிவிக்க உள்ளார்.