மனித தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்! – மேடையில் அழுத ஜோக்கர் நாயகன்!

Phoenix
Prasanth Karthick| Last Modified திங்கள், 10 பிப்ரவரி 2020 (11:49 IST)
Joaquin Phoenix
ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வென்ற ஜோக்கின் பீனிக்ஸ் மேடையில் அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.

2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் 11 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் இசைக்கான பிரிவுகளில் விருதை தட்டி சென்றது. அந்த படத்தில் ஜோக்கராக நடித்த ஜோக்கின் பீனிக்ஸ் இதற்கு முன்பும் மூன்று முறை ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்துள்ளார். ஆனாலும் முதல் முறையாக இப்போதுதான் முதல்முறையாக விருது பெறுகிறார்.

விருது வாங்கி மேடையில் பேசிய பீனிக்ஸ் ”ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தால் நாம் சிறப்பான நிலையை அடைய முடியும். நாம் அடுத்தவரின் வளர்ச்சிக்காக உதவ வேண்டும், அவர்கள் கற்றுக்கொள்ள உதவ வேண்டும், அவர்கள் மீட்புக்காக உதவ வேண்டும். அதற்கு பெயர்தான் மனிதநேயம்” என்று கூறினார். அப்படி கூறியதும் சில வினாடிகள் கண்கலங்கி அழுதார். பிறகு தனது சகோதரரை நினைவு கூர்ந்தார். அவர் அழுத சம்பவம் சில நிமிடங்கள் ஆஸ்கர் மேடையை அமைதியில் ஆழ்த்தியது.இதில் மேலும் படிக்கவும் :