1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (14:15 IST)

டிகே இயக்கத்தில் நடிக்கும் ஜீவா

ஜீவாவுக்கு 2014 அத்தனை நல்ல வருடமாக அமையவில்லை. அதிகம் எதிர்பார்த்த யான் படுதோல்வியை தழுவியது.
 
புதிதாக எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தவர் டிகே சொன்ன கதையில் இம்ப்ரசாகி நடிக்க சம்மதித்திருப்பதாக தகவல்.
 
டிகேயின் முதல் படம் யாமிருக்க பயமே சென்ற வருடம் வெற்றி பெற்ற சொற்ப படங்களில் ஒன்று. யாமிருக்க பயமேயை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்டே டிகேயின் இரண்டாவது படத்தையும் தயாரிக்கிறது. ஜீவாவுடன் பாபி சிம்ஹாவும் நடிக்கயிருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து படத்தை எடுக்க உள்ளார் டிகே.
 
ஜீவா நடித்த யான் படத்தையும் எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்போடெய்ன்மெண்டே தயாரித்தது குறிப்பிடத்தக்கது.