'தங்கல்', 'பாகுபலி' படங்களை அடுத்து சீனா செல்கிறது 'த்ரிஷ்யம்'


sivalingam| Last Modified திங்கள், 19 ஜூன் 2017 (06:18 IST)
இந்திய திரைப்படங்கள் சீனாவில் டப் செய்யப்பட்டு வெற்றி பெறுவது என்பது தற்போது சகஜமாகிவருகிறது. அமீர்கானின் 'தங்கல்' திரைப்படம் சீனாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூல் செய்தது. அதேபோல் உலகம் முழுவதும் சுமார் ரூ.1700 கோடி வசூல் செய்த 'பாகுபலி 2' திரைப்படம் விரைவில் சீனாவில் வெளியாகவுள்ளது.


 


இந்த நிலையில் கிட்டத்தட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படமும் சீனாவில் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீன ரசிகர்கள் த்ரில்லர் பாணி படங்களை ரசிப்பார்கள் என்ற நிலையில் த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் பாணியில் உருவாகியிருந்த இந்தப்படத்தின் கதை எந்தமொழிக்கும் பொருந்தக்கூடியதாக எந்த மொழி மக்களும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ளும் வகையிலான படம் என்பதால் இந்த படத்தை சீனாவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 த்ரிஷ்யம் படத்திற்கும் சீனாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என இந்த படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :