வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (11:39 IST)

மும்பையில் சண்டையிடப் போகும் ஜெயம் ரவி

தனி ஒருவன், ரோமியோ ஜுலியட், சுராஜின் பெயரிடப்படாத படம் என்று பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தற்போது ரோமியோ ஜுலியட் படத்துக்காக அவர் மும்பையில் முகாமிட்டுள்ளார்.
ரோமியோ ஜுலியட் ரொமான்டிக் படம். கள்வனின் காதலி படத்தை தயாரித்த லக்ஷ்மண் படத்தை இயக்க டி.இமான் இசையமைக்கிறார். தாமரை, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். ஹன்சிகா, பூனம் பஜ்வா என இரு ஹீரோயின்கள்.
 
தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. ஒரு பாடல் காட்சியை சமீபத்தில்தான் பிரமாண்டமான அரங்கில் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து சண்டைக் காட்சியை எடுக்க உள்ளனர்.
 
இந்த ஷெட்யூல்டுக்குப் பிறகு சுராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜெயம் ரவி கலந்து கொள்கிறார்.