வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:26 IST)

ஜெயம் ரவி நடிக்கும் ஹாரர் படம் மிருதன்

தனி ஒருவன், ஜெயம் ரவியை இளம் நடிகர்கள் மத்தியில் தனியாக அடையாளம் காட்டியிருக்கிறது.
 
தனி ஒருவனுக்கு முந்தைய, ரோமியோ ஜுலியட்டும் ஹிட். அடுத்து ஜெயம் ரவி என்ன படம் நடிக்கிறார் என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
 
ஜெயம் ரவியின் அடுத்தப் படம் ஹாரர் படமாக தயாராகிறது. அவர் நடிக்கும் முதல் ஹாரர் படம் இது. நாய்கள் ஜாக்கிரதை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கம். முதல்முறையாக இந்தப் படத்தில் லட்சுமி மேனன் ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். டி.இமான் இசை.
 
படத்துக்கு மிருதன் என்று பெயர் வைத்துள்ளனர். மிருகம் மனிதன் இணைந்த கலவை, மிருதன்.
 
பெயர்லயே பிரமாதப்படுத்துறீங்களேப்பா.