Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது ஜெயலலிதாவின் தவறுதான். கமல்ஹாசன் பேட்டி


sivalingam| Last Modified திங்கள், 13 மார்ச் 2017 (04:27 IST)
ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் தோன்றியுள்ள நிலையில் வெளிப்படை தன்மை இல்லாமல் ஜெயலலிதா நடந்து கொண்ட காரணத்தால்தான் இந்த சந்தேகம் எழுந்துள்ளதகவும், அரசியல் தலைவர்கள் எளிதில் அணுகும் வகையிலும் வெளிப்படை தன்மையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும், அவ்வாறு வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருந்தது ஜெயலலிதாவின் தவறாகவும் இருக்கலாம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்


 


 நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த கமலஹாசன் மேலும் தனது பேட்டியில் கூறியபோது, ஜெயலலிதா மரணம் குறித்து தனக்கு சந்தேகம் எதுவும் இல்லை என்றும் அரசு, டாக்டர்கள் ஆகியோர் கூறுவதை நம்புவதாகவும் கூறினார். அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த மக்கள் சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். வாக்குகளுக்கு விலைபோகும் போது கேள்வி கேட்க முடியாது.நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 சாதியை எடுத்துவிடுவது தான் எனது கொள்கை, சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும். புதிதாக தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான தலைவரை மக்களே தேர்வு செய்யவேண்டும் . நான் அரசியலில் என்றும் அரசியல் பேசினால் மட்டுமே அரசியலில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை . நான் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன் "

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
 


இதில் மேலும் படிக்கவும் :