1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 23 மே 2015 (12:16 IST)

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு - முதல் ஆளாக கலந்து கொண்ட ரஜினிகாந்த்

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு சென்னை அண்ணா பல்லைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபத்தில் நடந்தது. இதில் முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
 
இந்த பதவியேற்பு விழாவில் ரஜினியுடன் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் ஏ.வி.ஏம்.சரவணன், நடிகர் பிரபு, சிவகுமார், கார்த்தி, மனோபாலா, வெண்ணிற ஆடை நிர்மலா, தியாகு, ஆனந்த்ராஜ், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர்.
முத்து படம் வெளியான நேரம், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறி, ஜெயலலிதா அந்தமுறை தேர்தலில் தோல்வியடைய ரஜினியும் ஒரு காரணமாக அமைந்தார்.
 
ஆனால், கொஞ்சநாளிலேயே அவரது ஜெயலலிதா மீதான விமர்சனம் மாறியது. வீரப்பனை கொன்ற தைரியலட்சுமி என்று ஜெயலலிதாவை புகழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.