வர்மாவில் துருவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஜான்வி?

VM| Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:19 IST)
கைவிடப்பட்ட வர்மா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. இதில் விக்ரம் மகன் துருவ்க்கு ஜோடியாக ஜான்வி நடிக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.


 
தெலுங்கில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற  ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இப்படத்தை இயக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அண்மையில்  டிரெய்லர் வெளியானது.
 
ஆனால் இயக்குனர் பாலா படத்தை திருப்தியாக எடுக்கவில்லை என்று கூறி பட நிறுவனம் முழு படத்தையும் கைவிட்டு விட்டது.
 
மேலும் துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் புதிய இயக்குனர்  மூலம் படத்தை இயக்கப்போவதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் புதிய வர்மா படத்தை இயக்க, கவுதம் வாசுதேவ் மேனனிடம் பட தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதற்கிடையே வர்மா படத்தில் மேகா சவுத்திரி ஹீரோயினாக நடித்து இருந்தார். அவரை மாற்றிவிட்டு,  அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை ஹீரோயினாக  நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதனிடையே ஜான்வி தரப்பில் வர்மா படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்கள். ஜான்வி எந்த தமிழ் படத்திலும் நடிக்க இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என மறுத்துள்ளார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :