வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (16:09 IST)

மார்ச் 13 திரைக்கு வரும் வானவில் வாழ்க்கை

காற்றின் தேசம் எங்கும் கானம் சென்று தங்கும். வானவில் வாழ்க்கை படத்தைப் பற்றி இப்படி ஒரே வரியில் சொல்லிவிடலாம். 
 
வானவில் வாழ்க்கையை இசையில் தேர்ச்சிபெற்ற இளைஞர்களை வைத்து ஜேம்ஸ் வசந்தன் எடுத்துள்ளார். இசை, இயக்கம் இரண்டும் அவரே. படத்தில் மொத்தம் 17 பாடல்கள்.
 
படத்தில் நடித்திருப்பவர்களே பாடல்களையும் பாடி வானவில் வாழ்க்கையை ஒரு முழுமையான இசைப்படமாக்கியுள்ளனர். சர்வதேச அளவில் இதுபோன்ற இசைப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் மார்ச் 13 தமிழகத்தில் படம் வெளியாகும் அதேநாள் யுஎஸ், கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய வெளிநாடுகளிலும் படத்தை வெளியிடுகின்றனர்.
 
படம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஜேம்ஸ் வசந்தனும் படத்தில் நடித்திருப்பவர்களும்.