Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக கலாசாரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு: நடிகர் தனுஷ்

Sasikala| Last Modified செவ்வாய், 10 ஜனவரி 2017 (17:44 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கமல்ஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், சிம்பு, சிவபார்த்திகேயன் உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது  கருத்துக்களை பகிர்ந்தோடு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தப்போது நடிகர் தனுஷும் தனது டுவிட்டர் பக்கத்தில்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
தனுஷின் டுவீட்டர் பக்கத்தில் 'தமிழர்களின் உரிமையையும், அடையாளத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு அங்கமாக  விளங்குவது 'ஜல்லிக்கட்டு. நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்' என்று நடிகர் தனுஷ் தனது கருத்தை  பதிவிட்டுள்ளார்.
 
ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தடை செய்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மூலமாக  விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது  உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருவதுடன்,  காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதில் மேலும் படிக்கவும் :