நாளைக்கும் நேரில் ஆஜராவாரா ஜெய்?


Cauveri Manickam (Suga)| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (21:38 IST)
குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வழக்கில், நாளைய விசாரணையில் ஜெய் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
 
‘சென்னை 28’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஜெய், கடந்த மாதம் 21ஆம் தேதி மது போதையில் தன்னுடைய ஆடி காரை அடையாறு மேம்பாலத்தில் மோதினார். 
 
அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார். யாருக்கும் அடிபடவில்லை என்றாலும், போதையில் இருந்ததால் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
 
அந்த வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. விசாரணையின்போது ஜெய் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகையின் நகலைப் பெற்றுக் கொண்டார். 
 
முன்னதாகவே யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்திற்கு வந்த ஜெய், தன்னுடைய காரில் காத்திருந்தார். மீடியாக்கள் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகு வேகமாக நீதிமன்றத்திற்குள் சென்று, குற்றப்பத்திரிகையின் நகலை வாங்கி உடனே காரில் ஏறி சென்றுவிட்டார். 
 
இந்த வழக்கின் விசாரணை, நாளையும் நடைபெற இருக்கிறது. நாளைக்கு அவரை விட்டுவிடக்கூடாது எனக் காத்திருக்கின்றன மீடியாக்கள்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :