வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2016 (18:00 IST)

இந்தியாவில் ஜாக்கிசான் படத்தின் படப்பிடிப்பு

இந்தியாவில் ஜாக்கிசான் படத்தின் படப்பிடிப்பு

ஜாக்கிசானுக்கு இந்தியாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தசாவதாரம் படவிழாவுக்காக இந்தியா வந்த அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.


 


இது அவரது குங்ஃபூ யோகா படத்தின் படப்பிடிப்புக்காக.
 
இந்தியா மற்றும் சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், வில்லனாக பல படங்களில் கலக்கிய சோனு சூட்டும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 
 
ஸ்டான்லி டோங் இயக்கிவரும் குங்ஃபூ யோகா படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்பூரில் நடந்து வருகிறது. இதற்காக ஜாக்கிசான் இந்தியா வருகிறார். 
 
அவர் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.