1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2014 (15:04 IST)

இவனுக்கு தண்ணீல கண்டம்

ஜோஸிய துணுக்கு எதுவும் கிடையாது. இது ஒரு படத்தின் பெயர். பெயர் வைத்தவர் இயக்குனர் சக்திவேல்.
பெயர் குறித்து அவரிடம் கேட்டதற்கு, பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை என்றார்.
 
மேலும், இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ, தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள், அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறோம். இந்த நகைச்சுவை ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் என்றார்.
 
சின்னத்திரை தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருக்கும் தீபக் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரைக்கு வருகிறார்.