Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாரியப்பன் கதையை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்...


Murugan| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (09:45 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனின் கதையை இயக்குகிறார் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ்.

 

 
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 
 
இவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மாரியப்பனை சந்தித்து அவர் அவர கடந்து வந்த பாதைகள் குறித்து தகவல்களை அவர் சேகரித்துள்ளார்.


 

 
இந்த படத்தில் மாரியப்பன தங்கவேலு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகிறது. இந்த படத்திற்கான முதல் போஸ்டர், புத்தாண்டான நேற்று வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :