Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

'காலா'வை முந்துகிறது 'விஸ்வரூபம் 2': விஷாலின் அதிரடி அறிவிப்பு

Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (19:48 IST)
தமிழ் திரையுலகம் கடந்த ஒன்றரை மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது
இந்த நிலையில் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் ரிலீசுக்கு காத்திருக்கும் படங்களை எந்த வரிசையில் ரிலீஸ் செய்வது என்ற குழப்பம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையை தீர்க்க முடிவு செய்த தயாரிப்பாளர்கள் சங்கம், முதலில் சென்சார் ஆன படங்கள் முதலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
எனவே ஸ்டிரைக் முடிவுக்கு வந்தாலும் திட்டமிட்டபடி ரஜினியின் 'காலா' திரைப்படத்தை திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியாது. அதற்கு முன்னர் சென்சார் சான்றிதழ் வாங்கிய கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' உள்பட அனைத்து படங்களும் ரிலீஸ் செய்த பின்னரே காலா படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :