வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:30 IST)

இஞ்சி இடுப்பழகியில் ஒரு பாடலுக்கு ஆடும் ஸ்ருதி...?

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் தயாராகிவரும் படம், இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில், சைஸ் ஸீரோ உடல்கட்டுக்கு முயற்சி செய்யும் பெண்ணாக அனுஷ்கா நடிக்கிறார். 
இந்தப் படத்தில் ஸ்ருதி ஒரு பாடலுக்கு நடனமாடயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
 
கார்த்தி, நாகார்ஜுன் இணைந்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தமான ஸ்ருதி, திடீரென்று அந்தப் படத்திலிருந்து விலகினார். அதன் காரணமாக ஸ்ருதி மீது வழக்கு தொடர்ந்தது படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமாஸ். சில தினங்கள் முன்புதான் அந்த விவகாரம் சமரசத்துக்கு வந்தது.
 
இந்நிலையில், அதே பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இஞ்சி இடுப்பழகியில் ஸ்ருதி ஒரு பாடலுக்கு நடனமாடயிருப்பதாக தகவல். ஆச்சரியம் இருக்காதா என்ன. கார்த்தி - நாகார்ஜுன் படத்துக்கு வாங்கிய அட்வான்சுக்கு பதில், இஞ்சி இடுப்பழகியில் அவர் நடனமாடுவதாகவும் கூறப்படுகிறது.