1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (09:39 IST)

மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் ஜோதிகா, கணவராக ரகுமான்...?

மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் மஞ்சுவாரியர் நடித்த படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ. மஞ்சுவாரியரின் ரீ என்ட்ரி படமான இதன் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கிறார். சூர்யாவின் 2டி என்ட்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.
இதில் ஜோதிகாவின் கணவராக நடிக்க ரகுமானை ஒப்பந்தம் செய்திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. மலையாளத்தில் மஞ்சுவாரியரின் கணவனாக குஞ்சாகா போபன் நடித்திருந்தார். 
 
படத்தில் நாயகிக்கே முக்கியத்துவம் என்பதால் முன்னணி ஹீரோக்களுக்குப் பதில் ரகுமானை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த தமிழ் ரீமேக்கையும் ரோஷன் ஆண்ட்ரூவே இயக்குகிறார்.