Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலகல்?


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (12:32 IST)
பைரவா படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 1ம் தேதி துவங்கியது.

 
 
இந்த படத்தில் ஜோதிகா உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வரும் ஜோதிகா, விஜய் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
தன் கேரக்டருக்கு சில மாறுதல்கள் செய்தால் தான் படத்தில் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டாராம் ஜோதிகா. சமீபத்தில் தொடங்கிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கும் ஜோதிகா வரவில்லை. 
 
அதனால் இயக்குனர் தற்போது ஜோதிகாவிற்கு பதிலாக வேறொரு ஹீரோயினை நடிக்கவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். இதனால் ஜோதிகா இந்த படத்தில் நடிப்பது சந்தேகம் தான் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :