Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ்கன் அட்மின் கைது என்றால் 'நெருப்புடா' எப்படி வந்தது?


sivalingam| Last Modified புதன், 13 செப்டம்பர் 2017 (23:30 IST)
தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்றும் விஷாலின் ஐடி படையினர்களின் தீவிர முயற்சியால் இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இனிமேல் கோலிவுட் திரையுலகில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற வகையில் செய்தி வெளியாகி வருகிறது.


 
 
ஆனால் தமிழ்கன் அட்மின் பிடிபட்டார் என்று கூறப்படுகிறதே தவிர, அந்த இணையதளம் இன்னும் முடக்கப்படவில்லை. ஒரு அட்மின் இல்லாமல் இணையதளம் எப்படி இயங்கும் என்ற கேள்வி எழுகிறது.
 
அதுமட்டுமின்றி தமிழ்கன் இணையதளத்தில் கெளரிசங்கர் கைது செய்யப்பட்ட பின்னர் தான் கடந்த வெள்ளியன்று வெளியான 'நெருப்புடா' திரைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் அவர் உண்மையிலேயே அட்மின் ஆக இருந்தாலும் இந்த கைது நடவடிக்கையால் என்ன பலன்? என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டது உண்மையான அட்மின் தானா என்ற கேள்வி எழும் நிலையில் தற்போது இந்த புதிய கேள்வியும் எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :