வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (17:55 IST)

அச்சம் என்பது மடமையடா: சில சுவாரஸ்ய தகவல்கள்!!

'அச்சம் என்பது மடமையடா', சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம். இப்படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 


 
 
பெரிய எதிபார்ப்புகளுடன் இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ....
 
# நட்பாக பழகும் நாயகன், நாயகி ஒரு கட்டத்தில் எதிர்பாராத சம்பவத்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பது 'அச்சம் என்பது மடமையடா'. 
 
# பயத்தைப் பார்த்து நம்ம ஓடக் கூடாது, பயம் தான் நம்மைப் பார்த்து ஓட வேண்டும் என்கிற ஒரு வாரி தான் இக்கதையின் ஆரம்பப் புள்ளி.
 
# இதுவரை கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் 'அச்சம் என்பது மடமையடா' படம் தான் கமர்ஷியல் பாணியில் அமைந்திருக்கிறது. 
 
# முதலில் பல்லவி சுபாஷ் நடிக்க இப்படம் தொடங்கப்பட்டது. ஆனால், அவர் நாடகத்தில் பிஸியானதால், படக்குழு மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்து, முழுமையாக மறுபடியும் காட்சிப்படுத்தி இருக்கிறது.
 
# முதல் பாதி படத்திலேயே 5 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாம் பாதியில் பாடலே கிடையாது. 
 
# 'தள்ளிப் போகாதே' பாடலின் டியூனை விமானத்திலேயே தயார் செய்து, கெளதமுக்கு அனுப்பி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடலாசிரியர் தாமரையிடம் கொடுத்து பாடல் வரிகளை முடித்து வையுங்கள் என்று கூறியிருக்கிறார். 
 
# அந்த டியூன் தாமரைக்கு புரியவில்லை. இறுதியில் கெளதம் மேனன் உட்கார்ந்து அந்த டியூனை புரியவைத்து, தாமரை பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். 
 
# இப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பில், சிம்புவுக்கு மூக்கில் அடிபட்டது. ஆனால், அதையும் மீறி முழுப்படப்பிடிப்பையும் முடித்துவிட்டு கிளம்பியிருக்கிறார் சிம்பு.
 
# 'தள்ளிப் போகாதே' பாடல் படப்பிடிப்பு 7 நாட்களுக்கு திட்டமிட்டு பாங்காக்கிற்கு சென்றார்கள். ஆனால், 2 நாட்களில் மொத்தப் பாடலையும் முடித்து விட்டார்கள்.
 
# இடைவேளைக்குப் பிறகு வரும் ஒரு காட்சிக்கு டப்பிங் பண்ணும் போது கெளதம் மேனனை கட்டிப்பிடித்து அழுதுவிட்டார் சிம்பு. ஒரு அரை மணி நேரம் இடைவெளி எடுத்து கொண்டு பின்பு வந்து டப்பிங் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
 
# இப்படத்தின் தெலுங்குப் பதிப்பிற்கு கிடைத்த பணத்தை வைத்தே தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு படப்பிடிப்பையும் ஒரு சேர முடித்திருக்கிறார் இயக்குனர் கெளதம் மேனன்.
 
# இப்படத்தின் உரிமையை ட்ரைடண்ட் ஆர்ட் ரவி கைப்பற்றி இருக்கிறார். தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள். 
 
# ஒவ்வொரு திரையரங்கின் மேலாளரின் குடும்பத்துக்கு தன்னுடைய சொந்தப் பணத்தில் ஆடைகள் அனுப்பி வைத்திருக்கிறார் சிம்பு.