நீ மிகப்பெரிய நடிகனா வளரனும் ! ஆர். ஜே. பாலாஜியை வாழ்த்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (18:49 IST)
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மிகப்பெரிய நடிகராக வரவேண்டும் என வாழ்த்தியுள்ளார். 


 
ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கி பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்த ஆர்.ஜே. பாலாஜி. தற்போது ‘எல்.கே.ஜி.’ படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நாஞ்சில் நடித்துள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகவுள்ளது. 
 
இந்த படத்தில் கமிட்டான உடனே ‘அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி’ என்று தான் படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. பிறகு அதற்கு ஏற்றவாறே , படத்தின் போஸ்டர், டீசர் ட்ரெய்லர் என அனைத்திலும் தற்போதய அரசியல் தலைவருக்கான அத்தனை அம்சங்களும் ஆர்.ஜே. பாலாஜிக்கு கட்சிதமாக பொருந்தியிருந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் மரண கலாய் கலாய்க்கும் விதத்தில் உருவாக்கப்படுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு படத்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''வணக்கம், நான் கபில் தேவ். ஆர்ஜே பாலாஜிக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாடுவது மிக எளிது. ஆனால், திரைப்படங்களில் நடிப்பது மிகக் கடினம். இதை ஒரு கிரிக்கெட் வீரனாக நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட சினிமா துறையில் இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் பெரிய நாயகனாக வளரவேண்டும் . உங்கள் திரைப்படம் எல்.கே.ஜி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற என் வாழ்த்துகள்'' என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
 
கபில் தேவ்வும் ஆர்.ஜே. பாலாஜியும் கிரிக்கெட் வர்ணனை செய்யும் போது நெருக்கமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :