வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:37 IST)

மாணவர்கள் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள வேண்டாம் - என்ன சொல்ல வருகிறார் கமல்?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள  வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். இதை படித்ததும் கமல் மீது கட்டுக்கடங்காமல் கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது.  ஆனால், கமல் சொல்லவருவதை முழுமையாக கேட்டால், நீங்களே 'அட' போட்டு ஆதரிப்பீர்கள்.

 
அப்படி என்ன சொன்னார் கமல்?
 
"குரல் கொடுக்க வேண்டிய கடமையை மாணவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். அது அவர்களின் குரலாக இருக்க வேண்டும்.  முதல் முறையாக பெருமைப்படும் அளவுக்கு நல்ல முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
 
அரசியல்வாதிகள் மாணவர்களை தூண்டுவார்கள். இப்போது மாணவர்கள் அரசியல்வாதிகளை மூச்சுத் திணற ஒட  வைத்திருக்கிறார்கள். இதில் சினிமா நட்சத்திரங்கள் பங்கெடுத்து அந்த ஒளியை வாங்கிக் கொள்ளக் கூடாது என நான் நினைக்கிறேன். இது அவர்களுடையப் போராட்டம். நாளைய அரசியல்வாதி அங்கு இருக்கக்கூடும்.
 
ஆகவே அவர்களை மிரட்டக் கூடாது. அறப்போராட்டத்தில் ஈடுபடும் அவர்களை தடுக்கும் அருகதை யாருக்கும் இல்லை" என்று  கூறியுள்ளார்.
 
நல்ல அறிவுரை... திரையுலகம் இதுக்கு செவிசாய்க்குமா?