1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (13:40 IST)

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொடி வீரன்

முத்தையா இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடிக்கிறார் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தப் படத்துக்கு கொடி  வீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 
முத்தையாவின் முதல் படம், குட்டிப்புலியில் சசிகுமார் நடித்திருந்தார். சாதி அபிமானப் படம் என்று கடுமையான விமர்சனங்கள்  எழுந்தாலும் பி, சி சென்டர்களில் படம் நல்ல வசூலைப் பெற்றது. இவர்கள் மீண்டும் இணையும் படம் என்பதால்  விநியோகஸ்தர்களிடையே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
முத்தையாவின் பிற படங்களைப் போல, கொடி வீரனும் கிராமத்துப் பின்னணியில் தயாராகிறது. நாயகி மற்றும் பிற நடிகர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.