1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (17:50 IST)

மலையாளத்தில் மம்முட்டி ஜோடியான சினேகா

பிரசன்னாவை திருமணம் செய்து, ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் சினேகா. திருமணமான நடிகைகளுக்கும் முதல் மரியாதை செய்யும் மலையாள திரையுலகு சினேகாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.


 
 
அறிமுக இயக்குனரின், கிரேட் ஃபாதர் என்ற படத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் மம்முட்டியின் மனைவியாக நடிக்கிறார் சினேகா. இதுவொரு ஃபேமிலி த்ரில்லர். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
சினேகாவுக்கு முன்பு, தேவயானி, மீனா உள்பட பல நடிகைகள், குழந்தை பெற்றுக் கொண்ட பின்பும் மோகன்லால் உள்பட பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.