காதலில் நான் கொஞ்சம் வீக்; பிந்து மாதவியின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

Sasikala| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (13:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், யாராவது ஒருவரை அழ வைத்தே டிஆர்பியை ஏத்துகின்றனர். நிகழ்ச்சியில் ஓவியா இதுவரை மூன்று முறை எலிமினேட் லிஸ்டில் வந்துள்ளார். 3 முறையும் மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.தற்போது நான்காவது முறையாகவும் எலிமினேட் லிஸ்டில் வந்துள்ளார். வழக்கம் போல இந்த முறையும் அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு ஓட்டு போடும் வேலையை தொடங்கி உள்ளனர்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓவியா நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அதாவது  ஆரவ்வை விரட்டி விரட்டி காதல் தொல்லை செய்கிறார். அதுவும் நேற்று ஆரவுடன் சென்று படுத்து கொள்கிறார். அவர் விலகி  சென்றாலும் விடாமல் மற்றவர்கள் இருப்பதையும் மறந்து நடந்துகொள்ளும் விதம் ஆரவ்வை விலகி செல்ல வைக்கிறது. தனை  சரிசெய்ய நினைத்த ஆரவ் மற்றவர்களிடம் புகார் அளிக்கிறார். அதில் ஓவியாவின் தொல்லை தாங்க முடியவில்லை. எங்கு  சென்றாலும் துரத்தியபடி வருகிறார் என்கிறார். 
 
இந்நிலையில் இதுகுறித்து வந்த ப்ரொமோ வீடியோவில் நடிகை பிந்து மாதவி, ஓவியாவிடம் இதெல்லாம் உனக்கு தேவையா?  என கேட்டபோது நான் காதலில் கொஞ்சம் வீக் என்று பதில் அளிக்கிறார் ஒவியா. இதெல்லாம் டாஸ்க்தான் என்றாலும் ஓவியா  மீது வெறுப்பு வரும் வகையில் உள்ளது. 
 
நடப்பவை அனைத்தும் ஓவியாவை வெளியே அனுப்ப திட்டமா அல்லது இதெல்லாம் பிக்பாஸின் வேலையாக இருக்கமோ  என்ற கேள்வியும் எழுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :