செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 22 அக்டோபர் 2016 (12:17 IST)

சென்னை, மூணாறில் படமாகும் டிக் டிக் டிக்

சென்னை, மூணாறில் படமாகும் டிக் டிக் டிக்

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கிறது.
 
 
விண்வெளியில் நடக்கும் கதை என்பதால் சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். 15 தினங்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். 
 
அதையடுத்து மூணாறில் சில காட்சிகளை படமாக்குகின்றனர். நிவேதா பெத்துராஜ் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
 
விண்வெளி கதையில் தயாராகும் முதல் தமிழ்ப் படம் இது என கூறப்படுகிறது.