பிக்பாஸ் நிகழ்ச்சியில் தவறான பதிலால் மாட்டிய சிநேகன்; சரியான பதிலால் தப்பிய காயத்ரி!!

Sasikala| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (11:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வீட்டில் இன்று என்ன நடந்தாலும் அதை கண்டுகொள்ளக் கூடாது என்ற டாஸ்க் என பிக்பாஸ் அறிவித்தார்.

 
இதையடுத்து அந்த வீட்டில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர்கள் சமைத்துக்கொண்டிருந்தை எடுத்து சாப்பிட்டார். அதன் பின் அவர்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களை ஒரு சாக்குப்பையில் போட்டு எடுத்து செல்வதை கண்டு கொள்ளாமலும்,   தடுக்க முடியாமலும் போட்டியாளர்கள் அவதி பட்டனர்.
 
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு டாஸ்கின்போது ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் என தவறாக  சொன்னதால் அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அதே கேள்வியை கவிஞர் சினேகனிடம் பிக்பாஸ் கேட்க, நீண்ட நேரம் யோசித்த அவர் "தாயுமானவர்" என்ற அதே தவறான பதிலையே கூறினார்.  இதனால் அவரை மீண்டும் ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
 
இதனை தொடர்ந்து இதுவரை பிக்பாஸில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து போட்டியாளர்களிடம் கேட்ட 5 கேள்விகள் கேட்டப்பட்டது. அதில் 5க்கும் சரியான பதிலளித்த காயத்ரியை, இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியலில் நீக்கி  காப்பாற்றப்பட்டார் என அறிவித்தார் பிக்பாஸ்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :