பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிடம் பேச மறுத்து அழவைத்த ஆரவ் (வீடியோ)!

Sasikala| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவ்வளவு நாட்களாக அழாத ஓவியாவை, இப்போது பலரும் அழ வைப்பது ரசிகர்களுக்கு கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆரவ், ஓவியா இடையே நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மெண்டலாக நடிக்கவேண்டும் என்பது டாஸ்க். இந்நிலையில் ஆரவ் பிக்பாஸிடம் சென்று ஓவியாவை பற்றி புகாரும் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினையை பற்றி கூறுவதை விட, இருவரும் பேசி முடிவெடுப்பது நல்லது என அறிவுரை கூறினார். இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் ஓவியா, ஆரவிடம் பேச ஐந்து நிமிடம் கேட்கிறார், ஆனால் ஆரவ் அவரிடம் பேச மறுக்கிறார், அதோடு மோசமாகவும் திட்டுவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
 
இதனால் ஓவியா அழுவது போல் புரொமோவில் காண்பிக்கப்பட்டது. அவர்களின் சண்டை பார்த்து ரைசா சிரிப்பது போலவும்  அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :