Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமையல் போட்டி நடுவர் ஜூலியை கலாய்த்த சிநேகன்!

Sasikala| Last Modified சனி, 29 ஜூலை 2017 (13:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய 33 நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு புது  வகையான டாஸ்ட் கொடுக்கப்பட்டது.

 
அந்த டாஸ்கில் செட்டிநாடு மட்டன் மற்றும் மீன் வருவலை இரண்டு டீம்கள் சமைக்க வேண்டும் என்றும், இதற்கு நடுவராக  ஜூலியை நியமித்தார் பிக்பாஸ். அதன்படி இரண்டு குழுக்களாக பிரித்தனர், ஒன்றில் சிநேகன் குழு மற்றொன்று சக்தி குழு என  பிரிக்கப்பட்டது.
 
இரண்டு டீம்களும் சமைக்கப்பட்ட உணவுகளை அலங்கறித்து மேஜையில் வைத்தனர். சிநேகன் சமைத்த செட்டிநாடு மட்டன் வறுவலை ஜூலி சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது சிநேகன் எலுமிச்சை பழத்தை எடுத்து மட்டனில் பிழிந்துவிட்டதோடு,  நீங்கள் இதற்கு முன்னர் செட்டிநாடு ஓட்டல் பக்கமே போனதில்லை என்று தெரிகிறது என்று குறிப்பிட்டார்.
 
சுவைத்துபார்த்து தீர்ப்பு சொல்லவேண்டிய நடுவர், மீன் மற்றும் மட்டனை பார்த்ததும் ரவுண்டு கட்டி சாப்பிட்ட ஜூலியை சக  போட்டியாளர்கள் செம கலாய் கலாய்த்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :