பிக் பாஸ் வீட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து; நோஸ்கட் வாங்கிய சிநேகன்!

Sasikala| Last Modified சனி, 29 ஜூலை 2017 (18:17 IST)
நேற்று பிக் பாஸ் வீட்டில் இந்த வார சிறந்த போட்டியாளர்களாக சினேகன் மற்றும் சக்தியை தேர்ந்தெடுத்தனர். இவை போட்டியாளர்கள் அனைவரின் ஒப்புதலின் பேரில் பெரும்பாலானோர் சிநேகன் மற்றும் சக்தியை கூறினர். இதனால் இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்தார் பிக்பாஸ்.

 
இதனை தொடர்ந்து வெற்றிபெற்ற சினேன் மற்றும் சக்திக்கு பரிசாக ஹேர்கட் செய்வதற்காக ஒரு ஆணையும், ஒரு  பெண்ணையும் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தார் பிக் பாஸ். ஹேர்கட் முடிந்த பின்னர் அவர்களுடன் போட்டோவுக்கு  போஸ் கொடுத்தபோது சிநேகன் அந்த பெண்ணின் தோள் மீது தன் கையை வைத்தார்.
 
இந்நிலையில் இதை பார்த்த சக்தி கையை எடுப்பா, இதுதான் சாக்குனு மேலே கைபோட்டுக்கிட்ட என கூறி சிநேகனை கலாய்த்துவிட்டார். ஆனால் அது கலாய்ப்பது போல அவரை கண்டித்தது ஆகும்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவிஞர் சிநேகன் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்  என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறிவரும் நிலையில், அவரை சக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரே கலாய்த்துவிட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :