Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவும்தான் பரணி மீது புகார் தெரிவித்தார்: ஆர்த்தி ட்வீட்!

Sasikala| Last Updated: புதன், 9 ஆகஸ்ட் 2017 (11:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ஓவியா. எங்கு பார்த்தாலும், யார் வாயிலும் பிக்பாஸ் குறித்தே பேசப்பட்டது. இதற்கு காரணம் ஓவியாவின் துடுக்குத்தனம் மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

 
இது ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை, ரசிகர் மன்றம் தொடங்கும் அளவுக்கு கொண்டு போனது. இவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனக்கு பிடித்தது போல் வாழ்ந்து வருகிறார்.


 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய ஆர்த்தியிடம் ஒரு ரசிகர், பரணி பற்றி மற்றவர்கள்  தவறாக கூறினால் நீங்கள் எப்படி நம்பலாம், அங்கு ஓவியா மற்றும் பரணி தான் நல்லவர்கள் என்றார். இதற்கு ஆர்த்தி,  ஓவியாவும் பரணி பற்றி புகார் அளித்துள்ளார். எனக்கு பரணி மீது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என டுவிட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :