செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (18:15 IST)

பாங்காங்கில் ஆர்யாவின் கடம்பன் இறுதிகட்ட படப்பிடிப்பு

மஞ்சப்பை ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியின் அடர்ந்த வனப்பகுதியில் தொடங்கியது. தற்போது கடம்பன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் பாங்காங் செல்லவுள்ளது.
 
இந்தப் படத்துக்காக ஆர்யா தனது உடம்பை முறுக்கேற்றி பாடி பில்டரைப் போல் மாற்றியுள்ளார். யுவன் இசையமைக்கும் இந்தப் படத்தில் கேத்ரின் தெரேசா நாயகியாக நடித்து வருகிறார்.