செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2018 (16:52 IST)

வித்தியாசமான முறையில் உருவாகிவரும் த்ரிஷா படம்

த்ரிஷா நடித்துவரும் ‘மோகினி’ படம் வித்தியாசமான முறையில் உருவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் மாதேஷ்.
ஆர். மாதேஷ் இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மோகினி’. “இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, சண்டை காட்சிகளில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இப்படத்தில்  உள்ளது. இப்படத்தில் கிட்டத்தட்ட 80 சதவீத காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. ஹாரர் பட வரிசைகளில் மிகவும் மாறுபட்டு  உருவாக்கப்பட்டுள்ளது.
 
‘காதலன்’ படத்தில் ‘முக்காலா முக்காபுல்லா’ பாடலில் பிரபுதேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று ‘பாகுபலி’ வரை விஷுவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதேபோன்று இப்படத்திலும் நிறைய விஷுவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில்  படம் வந்துள்ளது. இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகியுள்ளது. படத்தைப் பார்க்கும் அனைவரும் தங்களோடு  இணைத்துக்கொள்ள முடியும்” என்கிறார் மாதேஷ்.