பிக் பாஸில் இருந்து அழைப்பு வந்தால் நான் நிச்சயம் போவேன்!

Last Updated: செவ்வாய், 14 மே 2019 (15:59 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.


 
கமல் தொகுத்து வழங்கி மாபெரும் வெற்றிபெற்ற  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேளையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்  ப்ரோமோ சூட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும், பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக பங்கு பெறப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற விவரத்தை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள். 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வீடியோக்களை வெளியிட்டு மறுத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் மாறாக பிரபல நடிகையும்  கடந்த பிக்க பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான  ஷாரிக்கின் அம்மா உமா ரியாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கு பெறுவேன் என்று கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :