’நான் ஒதுக்கப்படுகிறேன்’ வருத்தத்தில் இலியானா!!


Sugapriya Prakash| Last Modified புதன், 21 டிசம்பர் 2016 (17:43 IST)
விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 

 
 
ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் இலியானாவை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.
 
சமூக வலைத்தளங்களில் தனது நீச்சல் உடை படங்களை பரவ விட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் இலியானா வருத்தத்தில் இருக்கிறார். 
 
கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :