வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (15:18 IST)

இஞ்சி இடுப்பழகிதானே.... தாராளமா எடுத்துக்கோங்க - அனுமதி தந்த இளையராஜா

தேவர் மகன் படத்தையும், அதில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்தப் பாடலை இஞ்சி இடுப்பழகி படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 


 

 
எப்படி?
 
அனுஷ்காவும், ஆர்யாவும் டிவி பார்க்கையில் இஞ்சி இடுப்பழகி பாடல் வருகிறது. உடனே கனவில் கிராமத்து உடையணிந்து அந்தப் பாடலுக்கு அனுஷ்காவும், ஆர்யாவும் ஆட ஆரம்பிக்கிறார்கள்.
 
இளையராஜா இப்போதெல்லாம் தனது பாடலை காப்பியடிக்கிறவர்களை கோர்ட்வரை சென்று துரத்தி அடிக்கிறார். அதனால், முறையாக அவரை அணுகி விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.
 
ஏமாற்றுகிறவர்களுக்குதான் அவர் சண்டமாருதம். சமாதானமாக வருகிறவர்களுக்கு அவர் மெலடி. இஞ்சி இடுப்பழகிதானே.... தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பெரிய மனது காட்டியிருக்கிறார். 
 
உற்சாகமாக இஞ்சி இடுப்பழகியை ரீமிக்ஸ் செய்து படத்தில் சேர்த்திருக்கிறார்கள்.