Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனிருத் இல்லாத தனுஷ் அவ்வளவுதானா?

dhanush anirudh" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (22:53 IST)
தனுஷ் , அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா இயக்கிய 'விஐபி 2' திரைப்படம் இன்று வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. தனுஷின் தீவிர ரசிகர்களுக்கு இந்த படம் கொண்டாட்டமாக இருந்தாலும், நடுநிலை ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு மொக்கை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.


 
 
குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களும் வைத்துள்ள ஒரு குற்றச்சாட்டு பின்னணி இசையின் சொதப்பல்தான். முதல் பாகத்தில் அனிருத் பின்னணி இசையில் பட்டையை கிளப்பிய நிலையில் அதில் பாதி கூட சீன் ரோல்டான் தரவில்லை என்பதுதான் அனைவரின் குற்றச்சாட்டாக இருந்தது
 
'மாரி' படத்திற்கு பின்னர் தனுஷூக்கு இன்னும் வெற்றி கிடைக்காததற்கு காரணம் அனிருத்தின் பிரிவே என்றும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் இளையராஜாவை பகைத்து கொண்ட அத்தனை நடிகர்களும் இயக்குனர்களும் தோல்வியையே தழுவினர். அதேபோல் ஒரு நல்ல கூட்டணி உடைந்தால் மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் கஷ்டமான காரியம் என்றும் அடுத்த படத்திலாவது தனுஷ் கெளரவம் பார்க்காமல்    அனிருத்துடன் இணைய வேண்டும் என்றும் அவருடைய நலன் விரும்பிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :