Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் ரொம்ப சின்ன பையன்... சூர்யாவின் நழுவல் பதில்!

Sasikala| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (16:57 IST)
எஸ் 3 படத்தின் பிரஸ்மீட்டில் ரஜினிக்கு அடுத்து சூர்யாவுக்குதான் அதிக பிசினஸ் என்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, சக்தி இருவரும் பேசினர். வாங்குற சம்பளத்தை வச்சு பார்க்கக் கூடாது, படத்துக்கு ஆகிற வியாபாரத்தை வச்சு பார்க்கணும்  என்று இதற்கு விளக்கம் சொன்னார் ஞானவேல்ராஜா.

 
எஸ் 3 படம் வெளியாகும் முன்பே 100 கோடிக்கு விலைபோனதாகவும், படம் 200 கோடியை எளிதாக வசூலிக்கும் என்றும்  கூறினர். தொடர் தோல்வியில் இருக்கும் சூர்யா ரஜினிக்கு அடுத்த இடத்திலா? அப்போ விஜய், அஜித்தையேல்லாம் எதில்  சேர்ப்பது என்று ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
 
இந்நிலையில், ரஜினிக்குப் பிறகு நீங்கதானாமே, அப்படீன்னா கமலை பீட் பண்ணிட்டீங்களா என்று கேட்டதற்கு, நான் பட  வியாபாரம் பக்கம் கவனம் செலுத்துறதேயில்லை. மத்தபடி ரஜினி, கமலுடன் என்னை ஒப்பிடாதீங்க, நான் ரொம்ப சின்ன பையன் என்று நழுவியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :