Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி கிளைமாக்ஸ் ரகசியம் எனக்கு தெரியும்: மத்திய மந்திரி


Abimukatheesh| Last Updated: வியாழன், 1 டிசம்பர் 2016 (18:54 IST)
பாகுபலி கிளைமாக்ஸ் ரகசியத்தை இயக்குநர் இராஜமௌலி தன்னிடம் கூறியதாக மத்திய மந்திரி ராஜவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

 

 
பாகுபலி இரண்டாம் பாகத்தை இயக்குவரும் இராஜமௌலி பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொலை செய்வது போன்ற காட்சியை வைத்தார். அந்த ரகசியம் இரண்டாம் பாகத்தின் கதையில் இடம்பெறும். ஆனால் அந்த ரகசியம் குறித்து இயக்குநர் இதுவரை யாரிடம் பகிர்ந்துக் கொள்ள்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கோவாவில் நடந்த 47வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ரத்தோர், பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியத்தை என்னிடம் கூறியதற்கு இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
இந்த ரகசியத்தை இராஜமௌலி ஏன் என்னிடம் கூறினார் என்றால் அரசுக்கு எல்லாம் தெரியும் என்பது அவருக்கு தெரியும். மேலும் ரகசியத்தை அரசு சிறந்த முறையில் காக்கும் என்பதும் அவருக்கு தெரியும், என்றார்.
 
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இராஜமௌலி யாரிடமும் சொல்லாத ரகசியத்தை அமைச்சரிடம் கூறினார் என்று அவரைத் தவிர யாருக்கும் தெரியாது.இதில் மேலும் படிக்கவும் :